சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Cancer Rasi in Tamil | கேன்சர் ராசிக்கான தமிழ் விளக்கம்
கேன்சர் ராசி என்பது 12 ராசிகளில் ஒரு ராசி ஆகும். தமிழ்நாட்டில் அதிக தமிழ் சினிமாவில் கேன்சர் ராசியை வைத்து அதிக நகைச்சுவை காட்சிகள் வைக்கப்பட்டிருக்கும். உதாரணத்திற்கு தூள் படத்தில் கூட ஒரு நகைச்சுவை காட்சி அமைந்திருக்கும் அதில் திரிஷா என்னும் ஒரு கதாபாத்திரம் தனக்கு கேன்சர் இருப்பதாக கூறுவாள் அதற்கு அந்த காட்சியில் இடம் பெற்றுள்ள மயில்சாமி விவேக்கிடம் த்ரிஷாவிற்கு கேன்சர் நோய் இருப்பதாக கூறி,தான் அதற்காக திருப்பதி மற்றும் பல கோயில்களுக்கு சென்று வருவதாக விவேக்கிடம் கூறி பணம் பறிப்பார், இந்த காட்சி அனைத்து தரப்பு மக்களிடையே ரசிக்கும் வகையில் அமைந்திருக்கும்.
இதுபோல் பல்வேறு திரைப்படங்களில் கேன்சர் ராசியை கேன்சர் நோய் என்று சித்தரித்து நகைச்சுவை காட்சிகள் படத்தில் இடம்பெற்றுள்ளது. நாம் முதலில் கேன்சர் ராசி என்பது என்ன ராசி என்று தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். கேன்சர் ராசி என்பது 12 ராசிகளில் கடகம் ராசி குறிக்கின்றது.
ஆங்கிலத்தில் கடகம் ராசிக்கு கேன்சர் என பெயர் அமைந்துள்ளது. இந்த பெயரை வைத்துதான் நம் தமிழ் சினிமாவில் நகைச்சுவை காட்சிகள் அமைந்துள்ளது.
நம் தமிழ் சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களுக்கும் ராசி என்பது இருக்கக்கூடும் அவர்கள் பிறந்த நேரத்தின் படி நட்சத்திரம் மற்றும் ராசிகளை ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
இந்த ராசியின் பெயரை வைத்து தான் அவர்களது வாழ்க்கை எவ்வாறு இருக்கக்கூடும் என்று கணிப்பார்கள். மேலும் திருமணத்திற்கும் ராசி நட்சத்திரங்களை வைத்தே முதலில் பொருத்தம் பார்ப்பார்கள் இதில் பொருத்தம் அவர்களுக்கு ஏற்பட்டுவிட்டால் பின்னர்தான் அவர்களின் ஜாதக பொருத்தங்களை பார்ப்பார்கள்.
ராசிகளில் மொத்தம் 12 ராசிகள் உள்ளன இந்த பதிவில் நாம் 12 ராசிகளுக்கான ஆங்கிலம் மற்றும் தமிழ் பெயர்களை பார்ப்போம்
மேஷம் | ARIES |
ரிஷபம் | TAURUS |
மிதுனம் | GEMINI |
கடகம் | CANCER |
சிம்மம் | LEO |
கன்னி | VIRGO |
துலாம் | LIBRA |
விருச்சிகம் | SCORPIO |
தனுசு | SAGITTARIUS |
மகரம் | CAPRICORN |
கும்பம் | AQUARIUS |
மீனம் | PISCES |
நாம் இந்த பதிவில் 12 ராசிகளுக்கான ஆங்கில பெயரை பார்த்தோம். மேலும் நம் தமிழ் சமூகம் எந்த ஒரு குழந்தை பிறந்தாலும் அதற்கு ராசி நட்சத்திரம் போன்றவைகள் அவர்களின் நேரத்தின் படி ஜோதிடர்களால் கணிக்கின்றனர்.
நம் தமிழ் சமூகத்தின் ஆண், பெண் ஆகிய இரு குழந்தைகளும் பிறந்த நேரத்தை வைத்து அவர்களின் ஜோதிட கணிப்புகள் கணிக்கின்றனர். முந்தைய தமிழ் சமூகம் ஒரு சில பகுதிகளில் பெண் குழந்தையாக இருந்தால் அவர்கள் வயதுக்கு வந்த நேரத்தை குறித்து ஒரு ஜாதகத்தை அமைப்பார்கள் அந்த ஜாதகத்தின்படி அவர்களுக்கு திருமணமும் நடத்தி வைப்பார்கள்.
ஆனால் இப்போதைய கால கட்டங்களில் பெண் குழந்தையின் வயதுக்கு வந்த நேரத்தை வைத்து யாரும் ஜாதகம் அமைப்பதில்லை. அனைவரும் அந்த குழந்தையின் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகத்தை உருவாக்குகின்றனர்.
இந்தப் பதிவில் கூறியுள்ள 12 ராசிகளுக்கான ஆங்கில பெயரையும் நாம் அறிந்து அதற்கான பலனை நாம் ஜோதிடர்களிடம் கேட்டு அறிந்து. ஒரு நிம்மதியான வாழ்க்கையை வாழ்வோம்