சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

கணவர் உடனான தகராறில் பெண் தற்கொலை..!
சேலம் அருகே மகனின் காதணி விழாவிற்கு உறவினர்களை அழைத்து தொடர்பாக கணவருடன் ஏற்பட்ட தகராறில் பட்டதாரி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.தனபால் என்பவருக்கும் BA., B.Ed., படித்த பட்டதாரி நந்தினி என்ற பெண்ணுக்கும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 4 வயதில் பெண் குழந்தையும் ஒன்றரை வயது ஆண் குழந்தையும் உள்ள நிலையில். மகனுக்குக் காதணி விழா ஏற்பாடு செய்துள்ளன. அந்த விழாவுக்கு நந்தினியின் சில உறவினர்களை அழைக்க வேண்டாம் எனக் கூறியதாகவும், இதனால் நேற்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. கணவருடன் கோபித்துக்கொண்டு அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்டு நந்தினி வெகு நேரமாகியும் வெளியே வராததால், கதவை உடைத்து பார்த்தபோது அவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததை கண்டு உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார் தனபால். ஆனால் செல்லும் வழியிலேயே நந்தினி உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீஸ் விசாரனைநடத்தி வருகின்றனர்கள்.