சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஐகோர்ட் உத்தரவு..!பென்ஷன் கிடையாது
சென்னையில் அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு ‘பென்ஷன்’ வழங்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் தனுஷ்கோடி, இவர் ஆரணியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியராக பணியாற்றினார்.
மேலும் இவர் தனது முதல் மனைவி உயிருடன் இருந்தபோதே, அவரது சகோதரியை, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். கடந்த 1997ல் பணி ஓய்வுக்கு பின், இவர் தனது பென்ஷன் பணம் பெற்று வந்தார். தற்போது 2010ல் தனுஷ்கோடி மரணமடைந்த நிலையில். தற்போது பென்ஷன் கேட்டு, அவரது இரண்டாவது மனைவி சாந்தி விண்ணப்பித்து இருந்தார். அதை, அக்கவுன்டன்ட் ஜெனரல் அலுவலகம் நிராகரித்தது.
அதனை தொடர்ந்து உத்தரவை எதிர்த்தும், பென்ஷன் வழங்க உத்தரவிடக் கோரியும், உயர் நீதிமன்றத்தில் சாந்தி மனுத் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவின் படி முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, சாந்தியை, 1975ல் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
சட்டப்படி, இந்த திருமணம் செல்லாது. அதனால், பென்ஷன் விதிகளின்படி, குடும்ப பென்ஷன் வழங்கும் கேள்வியே எழாது.பென்ஷன் திட்டப்படி, சட்டப்படி திருமணமானவருக்கே வழங்கப்பட வேண்டும். முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது, இரண்டாவதாக திருமணம் செய்தது செல்லாது;
அவருக்கு, குடும்ப பென்ஷன் வழங்க முடியாது. எனவே, பென்ஷன் விதிகளின்படி, குடும்ப பென்ஷன் மறுத்ததில் தவறு இல்லை என மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.