சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் /Happy New Year
புத்தாண்டு கொண்டாட்டங்கள் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கொண்டாடப்பட்டு வருகிறது. சமஇரவு மற்றும் பகல் வேலைகள் கொண்ட மார்ச் மாதத்தின் உத்தராயன நாளில் இருந்தே புத்தாண்டு பிறந்து வந்துள்ளது . இக்காலத்தில் வருடத்திற்கு 90 நாட்கள் கூடுதலாக இருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது .
அதன் பின்னர் ரோமன் கலண்டர் என்னும் காலண்டர் சூரியனை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இதுவே உலகம் முழுவதும் அறிமுகப்படுத்தினர். இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் புத்தாண்டு கொண்டாட்டத்தை டிசம்பர் 31 ஆம் நாளில் இருந்து துவங்கி ஜனவரி 1ஆம் தேதி வரை தொடர்ந்து ஆனந்தமாய் கொண்டாடி மகிழ்ந்தனர் புத்தாண்டு கொண்டாட்டத்தை பல நாடுகள் வரவேற்று அதற்கு விடுமுறை அளித்து கொண்டாடுகின்றனர் .
- தொடங்குகிறது புது ஆண்டு வரவேற்போம் மகிழ்வோடு..! நம்பிக்கையுடன் வாழ்வில் போராடு..! துன்பங்கள் பறந்தோடும் உன்னைக் கண்டு..! புதுமைகள் பிறக்கட்டும் புத்தாண்டில்..!
- எதிர்கால வாசல் கதவு நமக்காக திறக்கின்றது எதிர்நீச்சல் போட்டு நாம் வெற்றியினை குவித்திடுவோம்
- முடிந்து போன வாழ்வினை எண்ணி வருங்காலத்தை தொலைக்காதே ..!முடிந்தவரை போராடு நம்பிக்கை என்னும் விதையோடு ..!
- தேங்குகின்ற நீராக இன்று வரை நின்றது போதும் புது அர்த்தமுள்ள ஆண்டாக வரும் ஆண்டை மாற்றிடுவோம்
- முடிந்ததை எல்லாம் முடியட்டும் இனி புது அவதாரம் எடுத்திடுவோம் வலிமைமிக்க மனிதராக உயர்ந்து நாமும் காட்டுவோம்
- நம் எண்ணமெல்லாம் ஈடேற இறைவனிடம் வேண்டுவோம் அடுத்த ஆண்டு பிறப்பதற்குள் நினைத்ததை சாதித்து காட்டுவோம்
- உன்னை தூக்கி விட்ட கைகளுக்கு கை கொடு கடல் நீரினை போல் நட்பினை சேர்த்திடு நடக்காததை நடத்திக் காட்டிடு புது வாழ்வென்னும் வலையினை நீ வீசிடு இந்த புத்தாண்டு
- சிறகினை விரித்து பறந்திடு செங்காந்தள் இதழாய் சிரித்திடு செந்தமிழ் மொழியாய் வாழ்ந்திடு நாளை நிமிடங்கள் நமக்கு சொந்தமில்லை
- குறையாத அன்போடு உறவாடு உண்மை விலகாமல் நீயும் நினைவோடு ஒழுக்கத்தை நெஞ்சில் சுமையாய் நடந்தால் நல்லதே நடக்கும் உனக்கு
- கவலைகளை காட்டில் பறக்க விடு மனக்காயங்களை பின்னே தள்ளி விடு நம்பிக்கை என்னும் வாசலை திறந்திடு நாளை உனக்கான நாள் பிறக்கும்
- கீழே விழுந்த நாட்களுக்கு விடை கொடு புத்தாண்டு பிறப்பினை கையில் எடு புறம் பேசும் மனங்களை நீ விடு உனக்கே உரித்தான வாழ்வினை வாழ்ந்து
விரும்பியவை கிடைக்கப்பெற்று மனநிம்மதியும் சந்தோஷமும் உங்கள் வாழ்வில் நிரம்பி வழிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.