சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீரர்!
தென்கொரியாவில் உள்ள சாங்வான் நகரில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடந்து வருகிறது. இப்போட்டியில் பல நாடுகளில் இருந்து வீரர், வீரங்கனைகள் கலந்த கொண்டனர். அதில் இந்தியா நாட்டு பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 23 வயதான ஆர்ஜூன் பபுடா கலந்து கொண்டார். ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர்ரைபிள் பிறிவில் போட்டிகள் நடந்தான இதில் ரேங்கிங் சுற்றில் இந்திய வீரர் ஆர்ஜூன் பபுடா 261.1 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். மேலும் இறுதிப்போட்டியில் ஆர்ஜூன் பபுடா 17-9 என்ற புள்ளி கணக்கில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவரான அமெரிக்காவின் லுகாஸ் கோசெனீஸ்கியை வீழ்த்தி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினார். அதைகாட்டிலும் இவர் சீனியர் பிரிவில் சர்வதேச போட்டியில் வென்ற முதல் தங்கப்பதக்கம் இதுவாகும் என்பது குறிப்படதக்தது. மேலும் இவர் 2016-ம் ஆண்டு ஜூனியர் உலக கோப்பை போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். லுகாஸ் கோசெனீஸ்கி வெள்ளிப்பதக்கமும், இஸ்ரெல் வீரர் செர்ஜி ரிச்டெர் வெண்கலப்பதக்கமும் பெற்றனர்.