சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Appa Amma Quotes in Tamil | அப்பா அம்மா கவிதைகள்
இவ்வுலகில் நாம் இருப்பதர்க்கு முக்கிய பங்கு விதிப்பது பெற்றோர்களே! ஏன் என்றால் கண்ணுக்கு தெரிந்த கடவுள் அப்பா அம்மா! நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் என்பர். அப்பா அம்மாவை கடவுளாக கருதி பின் அவர்கள் கூறும் அறிவுறைகளை பின்பற்றி வந்தால் நன்மை உண்டாகும். அப்பா அம்மா என்னும் தாரக மந்திரத்தை கொண்டு அனைவரும் பெற்றோர் வழி, அவர்கள் சொல் கேட்டு நடந்தால் படைக்களாம் பல சரித்திரம்.
பெற்றோர்களின் அருமை என்பது நாம் படித்த படிப்பை விட ஒசத்தி தான், அதனால் தான் இனிஷியலை முதல்லயும் நாம படிச்ச படிப்பை கடைசியிலும் போட்டுகிறோம்.
அம்மா அப்பாவிடம் இருந்து நாம் எந்த ஒரு கடமைகளையும் எப்போதும் எதிர்பார்த்து செய்யக்கூடாது. நம்முடைய பிறப்பிற்காக இறப்பின் வாசல் வரை சென்று வந்தவர் நம் அன்பு அம்மா, இளமை காலத்திலிருந்து நம்மை பாதுகாத்து வளர்த்து அன்பையும் பசத்தையும் ஊட்டி வளர்ப்பவரே சிறந்த அப்பா, அவர்களுக்கு நன்றி கடனாக அவர்களை இறுதி காலம் வரை வைத்து பாதுகாப்பது ஒவ்வொரு குழந்தையின் கடமையாகும்.
- ஆரம்பம் முதல் கடைசி வரை நமக்கு மாறாமல் கிடைக்கும் ஒரே அன்பு அது அம்மா அப்பா அன்பு மட்டுமே
- அம்மா அப்பா தினம் வைத்து கொண்டாட அவர்கள் உறவுகள் அல்ல.. உயிர்கள்! அவர்களை, ஒவ்வொரு நாளுமே, கொண்டாடத்தான் வேண்டும்.
- நீ தேடி சென்றாலும், விலகி செல்வது மற்றவர்கள்! நீ விலகி சென்றாலும், உன்னை தேடி வருவது பெற்றவர்கள்.
- வாழ்க்கையில் கடைசிவரை தனக்குனு சமைக்காத ஜீவன் “அம்மா” தனக்குனு சம்பாதிக்காத ஜீவன் “அப்பா”
- தனது உதிரம் கொடுத்து இவ்வுலகிற்கு அறிமுகப் படுத்துவாள் தாய்.. தனது உயிரை கொடுத்து இவ்வுலகை காண்பிப்பவர் தந்தை..
- தாங்கிக் கொள்ள எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் “அப்பா” “அம்மா” என்ற உறவுக்கு இணையாக இவ்வுலகில் எந்த சொந்தமே இல்லை!
- ஒருவருக்கு உபகாரம் செய்ய வேண்டும் என்றால், முதலில் தாய்க்கு செய்.. ஒருவருக்கு மரியாதை செய்ய வேண்டும் என்றால் முதலில் தந்தைக்கு செய்..
- அம்மாவின் வயிற்று கருவறை பாக்கியமும், அப்பாவின் மார்பின் கருவறை பாக்கியமும் வாழ்நாளில் என்றுமே தீர்க்க முடியாத கடன்கள்!
- காதல் மட்டுமே புனிதமானது அல்ல! கைகால் வலிக்க, நாள்முழுவதும் உழைத்த தாய் தந்தையரின் உழைப்பு அதைவிட புனிதமானது
- நாட்கள் கடந்து போகலாம்! வருடங்கள் கடந்து போகலாம்! மணித்துளிகள் கடந்து போகலாம்! ஏன் காதலும் கடந்து போகலாம்! என்றும் கடந்துபோகாமல் நிலையானது வார்த்தைகளைக் கொண்டு விளக்க முடியாத இருஉறவுகள், அப்பா அம்மா மட்டுமே!
- தாங்கி பிடிக்க அம்மாவும் தூக்கி நிறுத்த அப்பாவும் இருக்கும் வரை யாரும் வீழ்ந்தது இல்லை.
- இந்த உலகத்தில் பெற்ற தாயை விட பெரிய சக்தி வேறு எதுவும் இல்லை.. தான் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் தன் மகனை கண் கலங்காமல் பார்த்து கொள்பவர் தந்தை..
- அம்மா அப்பா கரங்களில் இருப்பதை விட பாதுகாப்பான இடம் இந்த உலகில் வேறு எங்கும் இல்லை
- அப்பா அம்மா அன்பின் நிழலில் நாம் இருக்கும் போது ஒரு துன்பமும் நம்மை வந்து சேராது.
- மனைவியிடம் தோற்று போகாத ஆண்களின் கோவம் கூட தன் குழந்தையின் அன்பிற்கு முன்னால் தோற்று விடும்.
- அருகில் இருக்கும் போதே அள்ளிக்கொள். தொலைந்து போன பின் தேடாதே. அது மீண்டும் கிடைக்காத பொக்கிஷம். அப்பா அம்மாவின் அன்பு…!
- பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில் பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அப்பா’. கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில் கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.
- சாப்பிட்டியாப்பா.. என்பது அம்மாவின் பாசம் என்றால் சாப்பிடானான்னு.. கேளு என்பது அப்பாவின் பாசம்
- அன்புகலந்த பெற்றோர் அக்கறையோடு சமைப்பதால் தான், எப்போதும் வீட்டு சமையலில் சுவையும், சத்தும் அதிகமாக உள்ளது.
- உயிருக்குள் அடைக்காத்து உதிரத்தை பாலாக்கி பாசத்தில் தாலாட்டி பல இரவுகள் தூக்கத்தை தொலைத்து நமக்காகவே வாழும் அன்பு தெய்வம் அப்பா அம்மா மட்டுமே!
- அம்மாவின் பாசம் கருணையில் தெரியும் அப்பாவின் பாசம் அவரது கடமையில் புரியும்.