சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கனவுகளின் பலன்கள் | Benefits of Dreams
கனவு என்பது மனிதர்களுக்கு துக்கத்தில் வரும் இயல்பான ஒன்று சிலர் பகல் கனவு கண்டால் பலிக்காது என்று கூறுவது உண்டு அதேபோல் இரவு நாம் ஆழ்ந்து உறங்கும்போது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கனவு வருவது இயல்பு.
இதனால் தான் குழந்தைகள் தூங்கும்போது சிரிக்கிறார்கள், சிலர் துக்கத்தில் உளறுவார்கள் இதுபோன்ற நிகழ்வது துக்கத்தில் ஏற்படும் கனவுகள் தான் காரணம்.
இவ்வாறு ஏற்படும் ஒவ்வொரு கனவுக்கும் பல பலன்கள் உள்ளது எந்த மாதிரியான கனவுக்கு எப்படிப்பட்ட பலன்கள் என்று நாம் இனி வரும் குறிப்பில் பார்ப்போம்.
இறந்தவர்கள் கனவில் வந்தால் கிடைக்கும் பலன்கள்
துக்கத்தில் வரும் கனவு பலவிதமாக இருக்கு குறிப்பாக இறந்தவர்கள் கனவில் வந்து பேசினால் அவர்களுக்கு நல்ல பலன் கிடைக்கும் பெயரும் புகழும் உண்டாகும், அவர்களது இறந்துபோன தாய் அல்லது தந்தை கனவில் வந்தாள் அவர்களுக்கு வர இருக்கும் ஆபத்தை முன்கூட்டியே வந்து சுட்டி காட்டுகிறார்கள் என்று அர்த்தம். இது இறந்தவர்கள் கனவில் வந்தால் வரும் பலன்கள்.
இறந்துபோவதுபோல் கனவு வந்தால்
சிலருக்கு இறந்துபோவதுபோல் கனவு வந்தால் அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன வென்று பார்ப்போம் கனவு காண்பவர்கள் இறந்துபோவதுபோல் கனவு கண்டால் நல்லது நடக்கும் என்று தான் அர்த்தம் சுக வாழ்க்கை உண்டாகும். மேலும் தனது குடும்ப உறவினர்கள் இறப்பதுபோல் கனவு வந்தால் அவரகளது துன்பம் எங்கும் என்று அர்த்தம், நல்ல செய்து வருவதற்கான கனவு எதுவென்றால் தனது நண்பர்கள் இறப்பதுபோல் கனவு வருவது.
அடிப்பதுபோல் கனவு வந்தால்
நாம் தூங்கும்போது பிறரை அடிப்பதுபோல் கனவு வந்தால் கனவு கணடவர்கள் நண்பர்களால் புகழப்படுவர், புதிய தோழர்கள் கிடைப்பார்கள், இருக்கும் புகழை விட அதிகமாக புகழ் அடைவார்கள். கனவு கணடவர்கள் அடிபடுவதுபோல் கனவு கண்டால் அபிவிருத்தி உண்டாகும், மேலும் அதே காயம் துப்பாக்கி மற்றும் கத்தியால் காயம் அடைவதுபோல் கண்டால் நல்லதுக்கு இல்லை பழி வருவதற்கான வாய்ப்பு உண்டு எச்சரிக்கையாக இருக்கவும்.
பிரபலமானவர்கள் கனவில் வந்தால்:
நாட்டின் முக்கிய பிரபலங்கள் உங்களது கனவில் தங்களுக்கு அறிமுகம் ஆவதுபோல் கனவு கண்டால் தங்களுக்கு சமூகத்தில் மரியாதையும் அந்தஸ்தும் கிடைக்கும், இதுபோல் மணமாகாத பெண்கள் கனவு கண்டால் அவர்களுக்கு வருங்காலத்தில் வரும் கணவன் மிகவும் வசதியானவனாக இருப்பான்.
தேவலோக பெண்கள் கனவில் வந்தால்
ஆண்களுக்கு தேவலோக பெண்கள் கனவில் வந்தால் அவர்களுக்கு எதிரிபார்த்த நன்மைகள் உண்டாகும். இதுவே கல்யாணம் ஆகாத பெண்களின் கனவில் வந்தால் அவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சியம் ஆகும், திருமணம் ஆன பெண்களின் கனவில் வந்தால் பொருள் வரவு அதிகமாக இருக்கும்.
வினோதமான கனவு வந்தால்
தூங்கும்போது கனவு சிலருக்கு மனிதர்களை அல்லாமல் பார்ப்பதற்கு வேற்றுகிரகவாசி போல் இருந்திலோ அலல்து வினோதமான பொருட்கள் கனவில் தோன்றினாலோ அது கனவு காண்பவர்க்கு நல்லதில்லை நம்பிக்கை மோசடி, மாற்றும் ஏமாற்றம் நிகழப்போவதாக வரும் எச்சரிக்கை. எனவே கவனமாக இருக்கவும்.
சண்டை கனவு
நமது கனவில் அடிதடி, சண்டை மற்றும் கலவரங்களில் சிக்கிக்கொண்டு தவிப்பதுபோல் கனவில் வந்தால் நமக்கு வாழ்க்கையானது அமைதியான முறையில் மாறப்போகிறது என்று அர்த்தம் அந்த கலவரத்தில் அல்லது சண்டையில் நம்மை அடிவாங்குவதுபோல் கனவு கண்டால் பகைவர் இல்லை நேற்று அர்த்தம் அதையும் மீறி பகைவர் இருந்தால் அவரும் தனது பகையை மறந்து உங்களுடன் நட்பு பாராட்டுவார்.
ஆளுகை கனவு
சிலர் கனவில் அலுவதுபோல் கனவு வந்தால் அவரது வழக்கியில் பல துன்பங்கள் வருவதாக அர்த்தம் எனவே மனதை தைரியமாக வைத்துக்கொள்ளுங்கள்.
ஆபத்தான கனவு வந்தால்
கனவு காண்பவருக்கு ஏதேனும் ஆபத்து அல்லது தொந்தரவு ஏற்படுவதுபோல் கனவு கண்டால் அதற்கான விளைவுகள் எதிர்மறையாக இருக்கும். அந்த கனவில் வருவது போல் எந்த தொந்தரவும் இல்லாமல் வாழ்கை மகிழ்ச்சியாக இருக்கும். கனவு காண்பவரின் நண்பர்கள், உறவினர்கள் அல்லது தெரிந்தவர்கள் ஆபத்தில் இருப்பதுபோல் அக்கனவில் வந்தால். கனவு காண்பவர்களுக்கும் நண்பர்களால் சிக்கல்கள் ஏற்படும்.
அரிசி கனவில் வந்தால்
நீங்கள் தூங்கும்போது கனவில் அரிசி அல்லது அரிசியை கடையில் இருந்து வாங்கி செல்வதாக கனவு வந்தால் கனவு காண்பவரின் தொழில் மிகவும் சிறப்பாக நடந்து அதிக லாபம் பெறுவார்.
ஆசிரியர் கனவு
பள்ளிக்கூடம் அல்லது கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு தங்களது ஆசிரியர் கனவில் வந்தால் வாழ்க்கையில் வளங்கள் பெருகும் மற்றும் பணம் வரவு அதிகரிக்கும்.
ஏலக்காய் கனவில் வந்தால்
கனவு காண்பவர் கனவில் ஏலக்காய் கனவில் வந்தால் பொதுவெளியில் அவர் பெரிதும் மதிக்கப்படுவர். அதே ஏலக்காய் சாப்பிடுவதுபோல் கனவு வந்தால் அவர்க்கு செல்வம் பெருக்கப்போகிறது என்று அர்த்தம்.
இதுபோல் பல்வேறு கனவுகளுக்கு பல்வேறு பலன்கள் இருக்கின்றன இது ஒரு அனுமனத்தில் அடிப்படையில் தான் கூறப்படுகிறது இதை வைத்து முடிவு எடுப்பது 100% சரியாக வருவது சாத்தியமில்லை.