சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பிட்காயின் சர்ச்சை (Crypto Currency Bitcoin)..!
விழுப்புரத்தில் கிரிப்டோ கரன்சி பிட்காயின் மூலம் முதலீடு செய்வதாக கூறி 2 கோடி ரூபாய் ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்கப்பட்டது.
விழுப்புரம் திருமலை நகரைச் சேர்ந்தவர் முகமது அக்பர் 52, இவர் உள்ளிட்ட சிலர் கொடுத்துள்ள மனுவில்.. எங்களுக்கும் சிறுவானுாரைச் சேர்ந்த வேணுகோபால் என்பவருடன், கடந்த 2018ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அவர், தான் 2 ஆண்டுகளாக கிரிப்டோ கரன்சி பிட்காயின் பெரிய வகையில் டிரேடிங் செய்து வருவதாகவும், அதில் பல லட்சம் ரூபாய் சம்பாதிப்பதாகவும் கூறினார்.
இதை நம்பி, நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் 2 கோடி ரூபாய் வரை முதலீடு செய்து கிரிப்டோ கரன்சி வாங்கினோம். இதன்பின், எங்களது பணத்தை திருப்பிக் கொடுக்காமல், தலைமறைவாகி விட்டார்.எனவே, எங்களை ஏமாற்றிய நபர் மீது நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தருமாறு எஸ்.பி., அலுவலகத்தில் புகார் மனு அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது.