சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Kalvi Quotes in Tamil | கல்வி மேற்கோள்கள்
கல்வியானது மனிதர்களுக்கு ஒரு அடிப்படை தேவையாகும். கல்வி என்பது சிரியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அறிவு, நல்லொழுக்கம் போன்றவற்றை அழிக்கிறாது மேலும் அறியாமை, மூடத்தனத்தை வேரறுக்கிறாது.
கல்வியானது மனித வாழ்க்கையாய் வாழவும் வளம்பெறவும் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் அன்றாட வாழ்க்கையை நாம் வாழவேண்டுமேனில் அதற்கு கல்வி ஒன்றே உருதுணையாக விளங்குகிறது.
கல்வியானது ஒரு சாதாராண மனிதனை கூட பொறுப்புள்ளவராகவும் நல்ல குடிமகனாகவும் மாற்றும் சக்தி கொண்டுள்ளது கல்வி.
கல்வி கற்றவர்கள் இந்த சமுதயத்தில் சிறந்தவராகவும், பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியுடன் வாழ துணை புரிகிறது.
- “கல்வியே சிறந்த நண்பன் கற்றவர் எல்லா இடங்களிலும் மதிக்கப்படுகிறார். கல்வி அழகையும் இளமையையும் வெல்லும்”
- “ஒரு பள்ளிக்கூடத்தின் கதவைத் திறப்பவன், ஒரு சிறைச்சாலையை மூடுகிறான்”
- “ஒரு தேசத்தின் முதன்மையான நம்பிக்கை அதன் இளைஞர்களின் சரியான கல்வியில் உள்ளது”
- “கல்வியின் உயர்ந்த நோக்கம் அறிவு அல்ல செயல்”
- “அறிவு எப்பொழுதும் அறியாமையை ஆளும்”
- “சிந்திக்காமல் படித்தால் அந்தப் படிப்பு வீண், படிக்காமல் சிந்தித்தால் அந்த வாழ்க்கையே வீண்”
- “இந்த உலகத்தையே மாற்றக் கூடிய சக்தி வாய்ந்த கருவி கல்வி தான்-அக்கல்வியை பெற்று சிறப்போடு வாழ வாழ்த்துக்கள்”
- “கல்வி என்பது தெரியாததைத் தெரியச் செய்வதன்று-ஒழுக்கத்தை ஒழுக செய்வதேயாகும்”
- “மாணவர்களிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாத வரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை”
- “கற்பது கடினம், ஆனால் அதை விடக் கடினம் கற்பதை மறப்பது”
- “மனிதனுடைய முழுத் திறமைகளின் வெளிப்பாடே, உண்மையான கல்வி”
- “பெற்ற பிள்ளை கைவிட்டாலும், கற்ற கல்வி கைவிடாது-கல்வி ஆபரணமல்ல, ஆடை”
- “கற்காமல் இருப்பதைவிட பிறக்காமல் இருப்பதே நல்லது-ஏனெனில் அறியாமைதான் தீவினையின் மூலவேர்”
- “கற்றலை நிறுத்தும் எவரும் வயதானவராகிவிடுவார்கள், இருபது வயதானாலும் எண்பது வயதானாலும் கற்றலைத் தொடரும் எவரும் இளமையாக இருப்பார்கள் உங்கள் மனதை இளமையாக வைத் திருப்பது தான் வாழ்க்கையின் மிக ப்பெரிய விஷயம்”
- “கற்பதை நிறுத்தாதீர்கள் நீங்கள் தினமும் ஒரு புதிய விஷயத்தைக் கற்றுக் கொண்டால், உங்கள் போட்டியின் 99%ஐ நீங்கள் வெல்வீர்கள்”
- “கவலைகள் ஒருபோதும் வெற்றியைத் தருவதில்லை.. முயற்சிகளே!”