சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
கண்ணதாசனின் தத்துவங்கள் | Kannadasan Life Quotes In Tamil 
கண்ணதாசனின் இயற்பெயர் முத்தையா. இவர் தமிழ் திரையுலகில் சிறந்த பாடலாசிரியர் என்றால் இவரை தவிர வேறு யாரையும் சொல்லிவிட முடியது காலத்தால் அழியாத மற்றும் அழிக்கவும் முடியாத படைகளை எழுதி உள்ளார் 4000 மேற்பட்ட கவிதைகள், மற்றும் 5000 கும் மேற்பட்ட திரையிசை பாடல்கள், மற்றும் பல கட்டுரைகள் என்ன எழுத்துக்களால் இன்றும் மக்கள் மனதில் தினமும் பயணிக்கிறார். இவர் தமிழக அரசின் அரசவை கவிஞராக பதவி வகித்தார். சேரமான் காதலி எனும் வரலாற்று புதினத்தை எழுதியதால் இவருக்கு சாகித்ய அகாடமி விருதும் கிடைத்தது. இவர் தான் பாடல் வரிகள் மற்றும் கவிதைகள் மூலம் மனித வாழ்வில் இருக்கும் காதல், காமம், நட்பு, கோவம், வெறுப்பு, விருப்பம், என அனைத்தையும் அவரது பாடல்களில் கூறியிருப்பார் இவர் கவிதைகளின் அரசன் என்பதால் இவரை கவியரசன் கண்ணதாசன் என்று அழைக்கப்பட்டார். மேலும் தற்போது இவர் கூறிய சில பொன்மொழிகளை பார்க்கலாம்.
- எதன் மேலாவது அதிகம் ஆசைப்படும்போது அதை இப்பொது வைத்திருப்பவர்கள் மகிச்சியாக இருக்கிறார்களா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
- இருப்பது போதும் வருவது வரட்டும் போவது போகட்டும் மிஞ்சுவது மிஞ்சட்டும் என்று சலனங்களுக்கு ஆட்படமலிருப்பதே பற்றற்ற வாழ்க்கையாகும்
- தேவைக்கு மேலே பொருளும், திறமைக்கு மேலே புகழும் கிடைத்துவிட்டால் பார்வையில் படுவதெல்லாம் சாதாரணமாகத்தான் தோன்றும்.
- நல்லதே நினை, நல்லதே பேசு, நல்லதே கேள், நல்லதே நாடாகும்.
- அனுபவம் என்பது பெரிதாக ஒன்றும் கிடையாது, எல்லாவற்றையும் இழந்த பின்பு எஞ்சி நிற்பதே.
- தான் பெரிய வீரனென்று தலை நிமிர்ந்து வாழ்பவர்க்கும் நாள் குறித்து கூட்டிச்செல்லும் ஒருவன் அவன்தான் நாடகத்தை ஆடவைத்த இறைவன்.
- யாருக்காகவோ உன்னை மாற்றிக்கொள்ளாதே, ஒரு வேளை மாற நினைத்தால், ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்.
- நாம் செய்யாத ஒன்றிற்காக நாம் தண்டிக்கப்படுவோமாயின் அதன் பெயரே ஊழ்வினை.
- எதிரிபார்ப்பதை குறைத்துக்கொள் வருவது மனதை நிறைய வைக்கும்.
- பிறப்பால் தொடரும் உறவுகள் அல்லாமல் பிணைப்பால் தொடரும் உறைவுகளே உன்னதமானவை.
- சிறகு கிடைத்தால் பிறப்பது மட்டும் வாழ்க்கையல்ல சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்கை.
- ஒன்பது ஓட்டைக்குள்ளே ஒரு துளி காற்றை வைத்து சந்தையில் விற்றுவிட்டான் ஒருவன் அவன் தடம் தெரிந்தால் அவன்தான் இறைவன்
- கவலைகளின் அளவு கையளவு இருக்கும் வரை தான் கண்ணீருக்கு வேலை, அது மலையளவு ஆகும் போது மனமும் மறத்துப் போகும்.
Keywords:
Kannadasan Life Quotes In Tamil
Kannadasan Quotes