சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
காதல் என்ற பெயரில் திருநங்கை ஏமாற்றி திருமணம் செய்து தலைமறைவான இளைஞரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்:-
இந்திர நகரில் வசித்து வரும் ரோஜா என்ற திருநங்கையை பூமி என்ற இளைஞர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்பு சில மாதங்கள் இருவரும் ஒன்றாக வாழ்ந்து வந்த நிலையில் தற்போது வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.அதுசமயம் பாதிக்கப்பட்ட திருநங்கை ரோஜா தனக்கு அரசு நீதி கிடைக்க வேண்டும் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பூமியை தொடர்பு கொள்ள முயன்றபோது அவருடைய செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. எனவே அவரை தேடி கண்டுபிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இதன் இடையில் ரோஜாவுக்கு ஆதரவாக திருநங்கைகள் தெலுங்கானா மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.