சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சளை குறைக்க எளிய வழி | New Born Baby Fever Treatment in Home-Tamil
காய்ச்சல்
காய்ச்சல் என்பது ஒரு நோய் கிடையாது, அது சளி, இருமல் தொற்றுக்கான அறிகுறியாகும். அது பொதுவாக நம் உடலில் ஏற்படும் மாற்றங்களை எதிர்த்துப் போராடுகிறது மற்றும் இல்லாமல் நோயெதிர்ப்பு அமைப்பாக செயல்படுகிறது.
காய்ச்சல் வர காரணம்
குழந்தைகளுக்கு காய்ச்சல் வர காரணம் பல இருப்பினும், முதலில் வைரஸ் தொற்று, தடுப்பூசி செலுத்தியதனால், குழந்தையை அதிக வெப்பமான சூலலில் வைத்திருப்பது, மிகவும் இறுக்கமான மற்றும் சூடான ஆடையை அணிவது, அதிக நேரம் ஏசியில் குழந்தையை படுக்க வைப்பது, துக்கம்இன்மை, மேலும் தாய்மார்களுக்கு ஏதேனும் காய்ச்சல் இருப்பின் அது குழந்தைக்கும் பிரதபலிக்கும். இது போன்ற சுழல் குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டக்க கூடும்.
காய்ச்சலின் அளவு
குழந்தைகள் இருக்கும் வீட்டில் தெர்மாமீட்டர் வைத்துகொள்வது சிறந்தது. குழந்தைகளை பாதிக்கும் மெர்குரி தர்மாமீட்டரை தவிற்பது நல்லது. குழந்தையின் வெப்பநிலை அதிகமாவது போல் தெரிந்தால் உடனே தெர்மாமீட்டர் கொண்டு அளவிடுவது நல்லது. காய்ச்சல் 100 டிகிரி மிகாமல் இருப்பதே நல்லது.
0-5 மாத குழந்தைக்கு காய்ச்சல் 101க்கும் மற்றும் 6 மாத குழந்தைக்கு காய்ச்சல் 102க்கும் மேல் இருப்பின் உடனடியாக மருத்துவரை அனுக வேண்டும்.
ஈரத்துணி வைத்தியம்
குழந்தைக்கு உடல் வெப்பமாக கானப்பட்டால் முதலில் வெது வெதுபான தண்ணீரில் துணியை நனைத்து கொள்ள வேண்டும். பின்பு ஈரத்துணியை எடுத்து குழந்தையை நன்கு துடைக்க வேண்டும். பிறகு நெற்றியில் கட்டன் துணியை கொண்டு பற்று போட வேண்டும்.
நீர்சத்து அவசியம்
மேலும் 6 மாத குழந்தையாக இருந்தால் அதற்கு தாய்பால் உகந்தது. பின்பு குழந்தைக்கு இளஞ்சூடான கொதித்து ஆறவைத்த தண்ணீரை மட்டும் குடிக்க கொடுக்க வேண்டும். வேண்டுமானால் பலச்சாறு கொடுக்கலாம். பச்சதண்ணீரை எக்காரணம் கொண்டு குடிக்கவோ குளிப்பாட்டவோ கூடாது.
வெங்காயம்
உடலின் வெப்பநிலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டுமானால் வெங்காயத்தை பயன்படுத்தலாம். மேலும் நம் பெரியோர்கள் இதனை பயன்படுத்தி வந்த நிலையில் தற்போதும் சிலர் பின்பற்றி வருகின்றனார். வெங்காயத்தை வட்டமாக துண்டு போட்டு பின்பு அதை குழந்தையின் பாதத்தில் வைத்து ஓரு நிமிடம் தேய்த்து வர வெப்பநிலை குறையும்.
துளசி மற்றும் ஓமத்தரான்
குழந்தைகளுக்கு சளி மற்றும் இருமல் தொந்தரவு இருப்பின் அதர்க்கு இயற்க்கையான முறையில் குணப்படுத்தலாம். துளசி மற்றும் ஓமத்தரான் இலையை எடுத்துக்கொண்டு அதை தண்ணீருடன் செர்த்து நன்கு கொதிக்கவைக்க வேண்டும் பின் அதை ஆறவைத்து அதை சிறிது சிறிதாக கொடுத்து வருவது நன்மைதரும்.
ஒரு வயதை கடந்த குழந்தைகளுக்கு ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் ஓரு டீஸ்பூன் தேன் இதனுடன் இஞ்சி சாறு கலந்து குழந்தைக்கு கொடுத்துவர குழந்தைக்கு நன்மை உண்டாகும்.
திராட்சையின் பலன்
அரை கப் தண்ணீரில் 25 உலர் திராட்சைகளை போட்டு இரவு ஊற வைக்க வேண்டும்.பின்பு காலையில் ஊறிய திராட்சை மிருதுவாகிவிடும். இதனை அரைத்து பிழிந்து சாறு எடுத்துகொள்ள வேண்டும் பின்பு அத்துடன் எலுமிச்சை சாறு கலந்து காலை,மாலை இரு வேளை கொடுக்கலாம். இது ஹீமோகுளோபின் குழந்தைகளின் இரத்த அனுக்களை அதிகரிக்க உதவும்.
கடைசியில் நல்ல ஓய்வு
காய்ச்சலால் உடல் சோர்வாக காணப்படும். அப்போது உடலில் நோய் கிருமிகளை எதிர்த்து போராடிகொண்டு இருக்கும். அந்த சமயம் நன்றாக ஓய்வு எடுக்கவைத்து நான்றாக தூங்க வைக்க வேண்டும். இதுவே காய்ச்சலை விரைவாக விரட்டும் மருந்தாக கருதப்படுகிறது.
எந்த ஒரு காய்ச்சலாக இருந்தாலும் மூன்று நாட்களுக்குள் சரியகிவிட வேண்டும். இல்லையேனில் மருத்துவரை அனுகுவதே சிறந்ததாகும். மேலும் மருத்துவர் பரிந்துரையின்றி மருந்து மற்றும் மத்திரை உட்கொல்வது நல்லதல்ல.