சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஆன்லைன் ரம்மி க்கு தடை
புதிய சட்டத்திற்கு பரிந்துரை
தமிழகத்தில் சில நாட்களாக ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளின் மோகம் தமிழக மக்களிடையே அதிகரித்துள்ளது இதன் விளைவாக கடந்த சில நாட்களாக இளைஞர்கள் அதில் பணத்தை ஆன்லைன் ரம்மி போன்ற ஆன்லைன் சூதாட்டங்களில் இழந்து மன உளைச்சலுக்கு ஆளாகி வருகின்றன இறுதியாக தற்கொலை செய்து கொண்டு வருகின்ற இதில் அதிகம் ஆன்லைன் ரம்மி யில் தான் பெரும் பணத்தை இளைஞர்கள் இழந்து வருகின்றனர் எனவே தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டது இதனை அடுத்து ஓய்வுபெற்ற நீதியரசர் சந்துரு தலைமையில் ஒரு குழு அமைத்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது
அக்குழு ஆய்வு செய்தபின் தமிழக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது அதில் புதிய சட்டத்திற்கு பரிந்துரை செய்துள்ளது அவ்வறிக்கையில் ஆன்லைன் விளையாட்டுகளால் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுவது தவறானது என்று அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது மற்றும் கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் ஆன்லைன் விளையாட்டுகளில் பணத்தை இழந்து 17 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என தகவல் மேலும் இந்திய அரசியல் சாசனத்தை பயன்படுத்தி மத்திய அரசு தேசிய அளவில் ஒரு சட்டம் கொண்டு வர வேண்டும் என கமிட்டி பரிந்துரை செய்துள்ளது மேலும் ஆன்லைன் விளையாட்டுகளை முறைப்படுத்துவது இயலாத ஒன்று என்பதால் அதை முழுவதுமாக தடை செய்ய வேண்டும் என அக்குழு பரிந்துரை செய்துள்ளது பின்னர் ஏற்கனவே கொண்டு வரப்பட்ட சட்டத்தை கைவிட்டுவிட்டு புதிய சட்டத்தை கொண்டுவர வேண்டும் எனவும் இந்த அறிக்கையில் அக்குழு தெரிவித்துள்ளன