சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
சாய் பாபா தத்துவங்கள் | Sai Baba Quotes In Tamil
சாய் பாபா தனது 16ம் வயதில் தான் அவரது வரலாற்றின் தொடக்கமாக அவரது தீவிர பக்தர்கள் கூறுகின்றன அப்போது தான் அவர் ஷீரடியில் உள்ள ஒரு வேப்பமரத்துக்கு அடியில் தான் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். இதனால் தான் ஷீரடி தான் சாய்பாபா வணங்குவோருக்கு புனித ஸ்தலமாக இருக்கிறது. அவர் தியானம் செய்யும்போது வெயில் மழை என்று எதையும் கண்டுகொள்ளாமல் தியானம் மேற்கொண்டார் இதனால் ஆச்சர்யம் அடைந்தனர் மக்கள். அவர் அணிந்திருந்த உடைய அங்கு உள்ள மக்கள் மற்றும் சிறுவர்கள் அவரை கேலி செய்தனர் அவரை மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் கருதினர். ஆரம்பத்தில் இவர் ஏற்பதற்கு மக்கள் தயக்கம் காட்டினார்கள் ஏனென்றால் இவர் அணிந்திருந்த உடை இவர் இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர் என்று எண்ணினர் இவர் ஷீரடியில் இருக்கும்போது பெருபாலான நேரத்தை வேப்பமரத்தின் அடியில் தியாம் மேற்கொள்வது அல்லது அங்கு உள்ள வன பகுதியில் சுற்று வருவது போன்று மனிதர்களின் தொடர்பு இல்லாமல் வசித்து வந்தார். அதன் பின் அங்கு உள்ள ஒரு பராமரிப்பு இல்லாத மசூதியில் வசித்து வந்தார் அங்கு உள்ள மக்களிடம் வீடு வீடாக சென்று தனமாக பெற்ற பொருட்களை வைத்து சமைத்து அதை திரும்ப மீண்டும் மக்களுக்கே வழங்கிடுவார் மேலும் இவர் தீ ஏற்றி அதில் வரும் சாம்பலை அங்கு வரும் பக்தர்களுக்கும் மக்களுக்கும் வழங்கினார் பிறகு அங்கு இருக்கும் அனைவருக்கும் இவரு ஆன்மீக தத்துவங்கள் வழங்கினார் இதுபோல் நாம் இவரது கூறிய தத்துவங்களை சிலவற்றை பார்க்கலாம்.
- தூங்காத இரவுகள் இருக்கலாம், ஆனால் விடியாத இரவுமில்லை, முடியாத செய்யலுமில்லை, வெற்றி நிச்சியம்.
- உங்கள் எல்லா வலிகளையும் நான் தூக்கி எறிவேன் விசுவாசமும் பொறுமையும் வேண்டும், உங்கள் நாள் வருகிறது.
- என்னிடம் வருபவர்களுக்கும் என்னை தஞ்சம் அடைபவர்களுக்கும், என் உபதேசத்திற்காக என்னிடம் தீவிர நம்பிக்கை உள்ளவர்களுக்கும் நாம் எப்பொழுதும் உயிருடன் இருக்கிறேன்.
- கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சி தருவேன், எண்ணம் என் மேல் இருந்தால் எட்டி பிடித்திடுவாய்.
- உன் வேதனை பலரை சிரிக்க வைக்கலாம், ஆனால் உன் சிரிப்பு ஒருவரை கூட வேதனைப்படுத்தக்கூடாது.
- நிராகரிப்புகளை கண்டு நெஞ்சு உடையதே, உன்னை யாராவது தூக்கி எறிகிறார்கள் என்றால் இறைவன் உன்னை மேல தூக்கி விடுகிறான் என்று அர்த்தம்.
- உயர்ந்து கடவுள் முதல் மண்ணில் நெளியும் புழுக்கள் வரை அணைத்து உயிரிடத்தும் உயர்வு, தாழ்வு கருத வேண்டாம்.
- நான் இருக்கும் வரை நீ கலங்காதே நான் உன்னை கை விட மாட்டேன் எனது ஆசிர்வாதத்தினால் நீ அனைவராலும் மதிக்கப்படுவாய்.
- இனி நடக்க போவதை பார்த்து வியக்க போகிறாய் தைரியமாக இரு ஜெயிக்க போகிறாய்.
- நீ இழந்ததை நினைத்து வருந்தினால், இருப்பதையும் இழந்து விடுவாய், நீ இருப்பதை நினைத்து மகிழ்ந்தாள் இழந்ததும் அடைந்து விடுவாய்.
- நீ நிச்சியம் முன்னேறுவாய் உன் மனதில் எதிர்காலத்தில் பற்றிய பயம் இருந்தால் அதை தூக்கி எறிந்துவிடு உன்னோடு நான் இருக்கிறேன்.
- எதற்கும் கலங்காதே நீ வேண்டியது அனைத்தும் நிச்சியம் நிறைவேறும் நான் நிறைவேற்றுவேன்.
keywords:
Sai Baba Quotes In Tamil
Quotes In Tamil
Tamil