சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஆசிரியரின் பணி இடை மாறுதலை தாங்க முடியாமல் கதறி அழுத மாணவர்கள்
உத்தர பிரதேசத்தில் மாநிலத்தின் சாந்த மாவட்டத்தில் சிமேந்திர சிங் பாவெல் பணியிட மாறுதல் பெற்ற பள்ளியில் இருந்து விடைபெற்ற போது மாணவர்கள் அவரை அனுப்பி வைக்க மனம் இல்லாமல் கண்ணீர் வடித்த காட்சிகள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.
அவர் பள்ளியை விட்டு பேருந்து ஏறும் எல்லையை அடைந்ததும் அவர் மாணவர்களிடம் நான் விடை பெறுகிறேன் என்று கூறினார் மேலும் அங்கு வந்திருந்த மாணவர்களை திரும்பச் செல்லும்படி கூறி உள்ளார் ஆனால் குழந்தைகளோ உடனடியாக கண்ணீர் விட ஆரம்பித்துள்ளன.
அந்த ஆசிரியர் மாணவர்களை திரும்பிச் செல்லும்படி கூறும்போது அவர்களில் சிலர் அழ ஆரம்பித்து அவரை இருக்க கட்டி பிடித்துக்கொண்டார்கள்
அப்பொழுது திக்குமுக்காடி ஆசிரியர் தனது உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி அவர்களை படிப்பில் கவனம் செலுத்தி பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி செயல்படும்படி கேட்டுக்கொண்டுள்ளார்
அவர் மீண்டும் வருவேன் என்று கூறி அவர்களை சமாதானப்படுத்த முயன்ற போதும் தொடர்ந்து அழுது கொண்டிருக்கும் மாணவர்களை எதுவும் சமாதானப்படுத்த முடியவில்லை.
ஆசிரியர் சிமேந்திர சிங் பாவெல் உத்தரபிரதேசத்தில் உள்ள பள்ளியில் பாடம் கற்பித்து வந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அதே மாவட்டத்தில் உள்ள வேறு பள்ளிக்கு மாற்றப்பட்டார் இதனால் அந்த பள்ளியை விட்டு வெளியேறும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது
2018ஆம் ஆண்டிலிருந்து அப்பணியில் பணிக்கு சேர்த்துள்ளார் வித்தியாசமான கற்பித்தல் முறைக்காக மாணவர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ள இவருடைய முயற்சி மலைப்பாங்கான பகுதிகளில் இருக்கும் மாணவர்களின் வருகையை ஏற்படுத்தியுள்ளது .
மேலும் மாணவர்களுடன் அதனை அன்பை வளர்க்க எவ்வளவு கடினமாக உழைத்து இருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது