சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஜூலை 1ம் தேதி முதல் இந்தியாவில் வங்கி மற்றும் பணம் சார்ந்த 5 முக்கிய விதிகள்:-
இந்தியாவில் ஜூலை 1ம் தேதியிலிருந்து புதிதாக 5 முக்கிய வங்கி மற்றும் பணம் சார்ந்த விதிகள் அமலுக்கு வந்துள்ளது. இதில் கிரெடிட் கார்ட் பில்லிங் சைக்கிள் மாற்றப்பட உள்ளது அதன்படி முதல் மாதத்தில் 11ம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 10ம் தேதி வரை பில்லிங் கணக்கிடப்படும். மேலும் வங்கியில் வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டை க்ளோஸ் செய்யவேண்டுமானால் அதை நாம் 7 நாட்களுக்குள் க்ளோஸ் செய்ய வேண்டும். இல்லையென்றால் வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 500 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டும்.
பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க மத்திய அரசு கூறி வந்த நிலையில் அதற்கான அவகாசம் மார்ச் 23ம் தேதியே முடிந்துவிட்டது. ஜூன் 30ம் தேதிக்கு முன் இந்த இணைப்பை மேற்கொண்டால் 500 ரூபாய் செலுத்த வேண்டிய உள்ளது, அதுவே ஜூலை 1ம் தேதிக்கு பின் மேற்கொண்டால் 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
டிடிஎஸ் வரிகள் இனி டிஜிட்டல் பணத்திற்கும் விதிக்கப்படும். அதாவது க்ரிப்டோகரன்சி உட்பட க்ரிப்டோ வருமானத்திற்கு, க்ரிப்டோ மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைக்கு 1 சதவிகிதம் டிடிஎஸ் பிடிக்கப்படும். மேலும் ஒரே டிஜிட்டல் ரீதியாக மேற்கொள்ளப்படும் விர்ச்சுவல் பரிவர்த்தனை எனப்படும் virtual digital asset (VDA)க்கு மட்டும் இந்த டிடிஎஸ் பொருந்தும்.
வருமான வரியிலும் ஜூலை 1 முதல் மாற்றம் வருகிறது. பல்வேறு நிறுவனங்களிடமிருந்து இலவசப் பொருட்களைப் பெறும் மருத்துவர்கள், பிரபலங்கள் மற்றும் பிற நபர்கள் ஜூலை 1 முதல் அவற்றைப் பெறுவதற்கு வரி செலுத்த வேண்டும் இதேபோல் பிரபலங்கள், மருத்துவர்கள், மற்றும் பிற நபர்கள் போன்றவர்கள் பெறும் இலவச கார் மற்றும் விலை உயர்ந்த பொருட்களுக்கு அவர்கள்தான் வரி செலுத்த வேண்டும்.
டிமாட் கணக்குகளுக்கு கேஒய்சி மேற்கொள்ள ஜூலை30ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் உள்ளது அதற்குள் செய்யவில்லை என்றால் உங்கள் கணக்கு முடக்கப்படும் . அதாவது பெயர், விலாசம், பான், போன் எண், வருமான விவகாரம், இ மெயில் ஐடி போன்ற விவரங்களை அப்டேட் செய்ய வேண்டும் இல்லையென்றால் உங்கள் டி மாட் கணக்கு மொத்தமாக மூடப்படும் என குறிப்பிடப்படுகிறது.