சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Amma Quotes in Tamil | அம்மாவின் தத்துவங்கள்
அம்மா என்பவள் இந்த உலகில் வாழும் அனைத்து உயிர் ஜீவ ராசிகளும் பெற்றெடுத்தவள். தாய் என்பது மிக மகத்துவமான ஒரு சொல். ஒரு தாய் என்பவள் தன் குழந்தையை வயிற்றில் பத்து மாசம் சுமந்து தன் குழந்தைக்கு தன் ரத்தத்தை பாலாக கொடுத்து குழந்தையைக் பேனி காப்பாற்றுவாள்.
இந்த உலகில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் உயிர் ஊட்டியது தாய் தான் தாய் இல்லையெனில் நாம் யாரும் இந்த உலகில் இல்லை தாய்மை என்பது மிகச்சிறந்த படைப்பாகும், தாய் என்பவள் அவளுடைய குழந்தையை சிறுவயதிலிருந்து எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் பாசம் குறையாது கண்டித்து பாதுகாப்பாக வாழ்த்தி வருவாள். அந்தக் குழந்தை பெரியவனாக ஆன பிறகும் கூட ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் அந்தத் துன்பத்தை கூட தாங்க முடியாமல் தவித்துப் போகிறார்கள்அந்த குழந்தை பெரியவனாக ஆனபிறகும் கூட ஏதாவது ஒரு துன்பம் ஏற்பட்டால் அந்தத் துன்பத்தை கூட தாங்க முடியாமல் தவித்து விடுவார்கள்.
அம்மாவின் இறுதி மூச்சு இருக்கும் வரை அவள் தனது குடும்பத்தை நேசிப்பதை நிறுத்த மாட்டாள். அம்மாவிற்கு உடல் ரத்தம் சுண்டும் வரை தனது மகனோ மகளோ எந்தத் துயரமும் கஷ்டமும் படக்கூடாது என்று தன்னுடைய வாழ்நாள் முழுவதும் உடைத்து தேனி காப்பாற்றுவார் இந்த உலகின் மிகச்சிறந்த ஒரு சொல் அம்மா. இந்த பதிவிற்கான சில தத்துவங்களை பார்ப்போம்
- வார்த்தையில் அடங்கா காவியம், வர்ணத்தில் நிறையா ஓவியம் , அம்மா
- அம்மாவின் கைக்குள் இருந்தவரை இவ்வுலகம் அழகாதான் தெரிந்தது
- ஆயிரம் விடுமுறை வந்தாலும் அவள் அலுவலகத்திற்கு மட்டும் விடுமுறை இல்லை அம்மா சமையல் அறை
- வாழ்க்கை என்னும் மேடையில் நடிக்கத் தெரியாத ஒரு கதாபாத்திரம் அம்மா
- சுயநலமான உலகில் சுயநலமற்ற ஒரு உறவு அம்மா
- ஊர் முழுவதும் பல நூறு கோடிகள் இருந்தாலும் அம்மாவைப் போல் ஒரு சாமி இல்லை
- நான் கண்ட முதல் கனவு என் முதல் முத்தம் நீ அம்மா
- முதலில் நான் பேசி பழகியதும் உன் பெயர்தான் , முதலில் நான் எழுதி பழகியதும் உன் பெயர் தான் அம்மா
- அருகில் இருக்கும்போதே அள்ளிக்கொள் தொலைந்து போன பின் தேடாதே அது மீண்டும் கிடைக்காத பொக்கிசம் அம்மா
- காலம் முழுவதும் உன்னை வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும் சுமப்பவள் தாய் மட்டுமே அவளை என்றும் மனதில் சுமப்போம்
- உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
- ஒவ்வொரு நாளும் கவலைப்படுவார் ஆனால் ஒரு நாளும் தன்னைப் பற்றி கவலை பட மாட்டாள் அம்மா