சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
New Life Quotes in Tamil | புதிய வாழ்விற்கான தத்துவங்கள்
சிலர் அவர்களின் வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியோ அல்லது ஒரு தடுமாற்றமும் ஏற்பட்டு அவரின் வாழ்க்கையை செயல் அற்றவையாக ஆக்கி முடங்கிப்போய் இருப்பதில் இருந்து மீண்டு ஒரு புதிதான வாழ்க்கையை முதலில் இருந்து துவங்கி வாழ்க்கையை வெற்றிக்கான பாதையில் செல்வது தான் மகிழ்ச்சி .
அவர்களின் வாழ்க்கையில் ஏற்பட்ட அனைத்து விதமான துன்பங்களையும் துயரங்களையும் தூக்கி எறிந்து விட்டு புதிதாக வாழ்க்கையை ஆரம்பித்து அதற்கு சில பொன்னான வார்த்தைகள் அவர்களுக்கு தேவைப்படுகிறது. இந்த பொன்னான வார்த்தைகளை தான் நாம் புதிய வாழ்க்கைக்கான தூண்டுகோலாக தத்துவங்கள் என அழைக்கின்றோம். அவர்கள் இந்த தூண்டுகோல் தத்துவங்களை கேட்ட பிறகு அவர்களுக்கு தோல்வியை கண்டு பயம் இல்லாமல் போய்விடும் .எத்தனை முறை தோல்வி அடைந்தாலும் மீண்டும் மீண்டும் முயற்சி செய்து அவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள் .இந்தப் பதிவில் சில புதிய வாழ்விற்கான தத்துவங்களை சிலவற்றை பார்ப்போம் .
- அடுத்த நிமிடம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை முடிந்தவரை யாரையும் காயப்படுத்தாமல் வாழ கற்றுக்கொள்ளுங்கள்
- வாழ்க்கை அடுத்த நொடியில் ஆயிரம் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் சிலவற்றை சந்தோஷமாக சிலவற்றை சங்கடங்கள் ஆக
- வாழ்க்கை என்னும் நதியின் இருபுறமும் இருப்பது கரை என்னும் நம்பிக்கை அதில் ஓடுகிறது விதி என்னும் வேடிக்கை
- விருப்பம் இருந்தால் ஆயிரம் வழிகள் , விருப்பம் இல்லாவிட்டால் ஆயிரம் காரணங்கள் இவைதான் மனிதனின் எண்ணங்கள்
- ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை வந்தாள் அடுத்தது என்ன நடக்கும் என்ற கவலை இல்லை
- பேசும்போது வார்த்தைகளை கவனமாய் பேசு ஏனெனில் பேசும் வார்த்தைகள் இதயத்தை புண்படுத்தவும் செய்யும் இதயத்தை பழுது பார்க்கவும் செய்யும்
- போராடி தோற்பது வாழ்வின் ஒரு அங்கம் என்பதை மறந்து விடாதீர்
- ஆயிரம் தடவை சரியாக செய்து இருந்தாலும் ஒரு தவறை வைத்து எடைபோடுவது மனித இயல்பு
- லட்சியம் இருக்குமிடத்தில் அலட்சியம் இருக்காது
- வெளிப்படுத்தத் தெரியாத அன்பு கூட பேரன்பு தானே
- தேவைகளுக்கான தேடலும் மாற்றத்திற்கான முயற்சியும் வாழ்க்கைக்கான புத்தியும் உன்னால் மட்டுமே உருவாக்க முடியும்
- நிகழ்காலத்தை சரியாக பயன்படுத்திக் கொண்டால் எதிர்காலம் நம்மை வரவேற்கும்