சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil

அதிவேக பயணம் ஆபத்தானது!
கோவை மாவட்டம் ராமநாதபுரத்தில் உள்ள, புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் இன்று ஒரு விபத்து ஏற்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த் குமார் 51 வயது நிரம்பியவர். அவர் ஒரு தனியார் நிறுவனத்தில் பனி புரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல் காலையில் பணிக்கு ஒப்பணக்கார வீதியில் இருந்து புறப்பட்டு தனது அலுவலகம் இருக்கும் இடமான ஒண்டிப்புதூர் நோக்கி பயணித்தார்,
அப்போது ராமநாதபுரத்து மேம்பாலத்தில் அதிவேகமாக செல்லும்போது வளைவில் அவரது இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கு இருந்த தடுப்பு சுவரில் மோதி பழத்தின் மேல் இருந்து 40அடி கீழே விழுந்துள்ளார். அவலோவோ உயரத்தில் இருந்து கீழே விழுந்த அவர் பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுபோல் கடந்த மாதம் ஒரு இளைஞர் இதே பாலத்தில் உயிரிழந்ததும் அதே போல் பாலம் திறந்த அடுத்த நாள் ஒருவர் உயிரிழந்தது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த பாலம் திறந்து 2 மாதத்திற்குள் 3 உயிர்கள் போனது, அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே அங்கு தடுப்பு சுவரின் உயரத்தை அதிகரிக்க வேண்டும் அல்லது அதற்கு மேல் எதாவது பாதுகாப்பு தடுப்புகள் போன்ற கம்பிகள் அல்லது மற்ற நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பது அப்பகுதி மக்கள் அறிவுறித்தி வருகின்றனர்.