சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Funny Quotes in Tamil | நகைச்சுவை தத்துவங்கள்
நகைச்சுவை என்றாலே அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. மனதில் உள்ள குழப்பம், கஷ்டம், நிம்மதி இன்மை நீங்க நகைச்சுவை பார்த்து மனதை மகிழ்வித்து நிம்மதியடைய செய்துகொள்வோம்.
மேலும் நண்பர்களுடன் பேசி சிரிப்பது போன்ற செயல்களினால் மனதிற்க்கு நன்மை தருகிறது. தினமும் மகிழ்ச்சியான வாழ்வை வாழ வேண்டும், அதனால் மன பாரங்கள் நீங்கி மனதிற்கு ஆறுதல் நிலை கிடைக்கும் வகையில் உங்களுக்கான நகைச்சுவை தத்துவங்கள்.
- நாம எவ்வளவு தான் விரட்டி விரட்டி அடித்தாலும் மறுபடியும் பாசமா நம்ம கிட்டயே திரும்பி வர ஒரே ஜீவன் கொசு மட்டுமே!
- முகநூலில் பழகிய 11 நாட்களில் 11 பவுன் நகையை கொடுத்த பெண்.. நம்ம குருப்லையும் இருக்காங்களே தெண்டத்துக்கு.. சோத்துக்கு பழைய குழம்பு கூட வாங்க முடியாது.. இவங்க கிட்ட!
- “நவரச”ரசனை உடைய பெண் தான் வேண்டும் என்று தேடுபவனுக்கு.. ”புளிரசம்” கூட ஒழுங்கா வைக்க தெரியாத பொண்ணு தான் மனைவியா அமைவா.. ஏன் என்றால் விதி வலியது!
- மனைவியை அடிக்கடி சினிமா பார்க்க தியேட்டருக்கு கூட்டிட்டு போறிங்களே.. அவங்க மேல அவ்வளவு பிரியமா! அட நீங்க ஒண்ணு.. ஒரு மூணு மணி நேரம் அவ பேசாம இருப்பாளே..
- ஸ்கூல் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.. காலேஜ் டெஸ்ட்ல பிட் அடிக்கலாம்.. ஆனால் ப்ளட் டெஸ்ட்ல பிட் அடிக்க முடியாது
- இட்லி பொடியைத் தொட்டு இட்லி சாப்பிடலாம்.. ஆனா மூக்குப் பொடியைத் தொட்டு மூக்கை சாப்பிட முடியாது..
- அதிகமா படிச்சவன்கிட்டேயும் அதிகமா குடிச்சவன்கிட்டேயும் ரொம்ப நேரம் பேசக்கூடாது, ஏன்னா அவன் நம்மை கிருக்கன் ஆக்கிடுவான்
- எங்க ஊர் வரைக்கும் கொரோனா வந்துடுச்சி.. அதுக்கு ஈ பாஸ் யார் கொடுத்தது!
- மனைவி கணவனிடம் என்னங்க நான் மாசமா இருக்கேன்.. அதற்கு கணவன் உங்க அப்பா அம்மாகிட்ட சொன்னியா? மனைவி போங்க நான் காலேஜ் படிக்கும்போது சொன்னதுக்கே அடிச்சாங்க.. இப்ப எப்படி சொல்றதாம்.. கணவன்!
- குத்துனவன் நண்பனா இருந்தா செத்தாக்கூட சொல்லக்கூடாது அதுதாண்டா நட்பு, குத்துனது எதிரியா இருந்தாலும் செத்த பிறகு சொல்ல முடியாதுடா!
- கணவன் மனைவியிடம் ரெண்டு கண்ணிருக்கே அரிசியில ஒழுங்கா கல்லை பொறுக்க முடியாதா? அதற்கு மனைவி கணவனிடம் முப்பத்திரண்டு பல்லு இருக்கே மெல்ல முடியாதா?