சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
Pongal Wishes in Tamil | பொங்கல் வாழ்த்துக்கள்
உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களின் மகிழ்ச்சிகரமான நாளானது பொங்கல் திருநாள். உலகில் பல நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் அனைவரும் கொண்டாடப்படுது பொங்கல் பண்டிகை மிக விமர்சையாக நம் விவசாயிகளை பொற்றும் விதமாக இந்த பூமியில் வாழ்வதற்கு உறுதுணையாக இருக்கும் இயற்கையை பேராற்றலை போற்றி வணங்கக்கூடிய வகையிலான திருநாள் தான் பொங்கல் பண்டிகையாகும்.
பொங்கல் பண்டிகை சாதி மத பேதமின்றி தமிழர்கள் அனைவரும் இயற்கையை வணங்கி, தமிழின் பெருமைகளையும், தொன்மையையும் உலகறியச் செய்வோம் என எல்லாம் வல்ல இறைவனிடம் அருள் புரிய இயற்கையோடு இணைந்து ஆனந்தமாய் கொண்டாடும் பண்டிகை பொங்கல்.
பொங்கல் திருநாளில் முதல் பண்டிகையாக போகி தொடங்கி, தைப்பொங்கல், மாட்டுப்பொங்கல், உழவர் திருநாள் என வரிசைக் கட்டி, கடினமாக உழைத்து வரும் நமது விவசாய பெருங்குடி மக்களின் களைப்பை போக்கி களிப்பில் ஆழ்த்தும் உற்சாக படுத்தி உழைப்பின் மேன்மையை உலகுக்கு உணர்த்து உன்னத திருநாள் பொங்கல்.
பொங்கல் வாழ்த்துக்களை உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அன்பிற்குரியவர்களுக்கு தெரிவிக்க இந்த பொங்கல் வாழ்த்துக்களை பயண்படுத்திக்கொள்ளுங்கள்.
- அன்பு பொங்க, ஆசைகள் பொங்க, இன்பம் பொங்க, இனிமை பொங்க என்றும் உங்கள் வீட்டில் மகிழ்ச்சி பொங்க பொங்கலோ பொங்கல் வாழ்த்துக்கள்
- வருகிறது புது பொங்கல் வளம் தரும் தை பொங்கல் காளைகள் சீறிப்பாய காத்துக்கிடக்கு வாடி வாசல் அரிசி மாவில் கோலமிட்டு ஜொலிக்கிறது வீடு வாசல்
- உலவனுக்கு ஒரு திருநாளாம் உலகம் போற்றும் நன்னாளாம் சூரியனை வணங்கிவிட்டு சுருக்கு பையில் காசு எடுத்து தித்திக்கும் கரும்பு வாங்கி தெவிட்ட தின்னும் திருநாளாம் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள்
- இந்த இனிய பொங்கல் நாளில் வாழ்வில் எல்லா வளமும் நலமும், அதிர்ஷ்டமும் பெற்று வாழ என் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
- பொங்கல் வாழ்த்து பசுமை பொங்கட்டும்.. பிளாஸ்டிக் ஒழியட்டும்.. விவசாயம் பெருகட்டும்.. வீதிகளில் கேரி வை அழியட்டும்.. கைகோர்ப்போம் பசுமை உலகம் அமைக்க.. அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
- புத்தரிசி புதுப்பானை பொங்களுடன் கதிரவனை வணங்கிட, என்றும் கதிரவன் நீங்கா ஒளியை தந்திட, வாழ்க்கை கரும்பைப்போல் இனித்திட, விவசாயம் செழித்திட, இல்லத்தில் மகிழ்ச்சி பொங்கிட வேண்டும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்
- அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்.. வறுமை நீங்கி செல்வம் பொங்கட்டும்! வறட்சி நீங்கி வாழ்க்கை பொங்கட்டும்! அறியாமை அகன்று அறிவு பொங்கட்டும்.. இருள் மறைந்து ஒளி பொங்கட்டும் அனைத்தும் பொங்க இல்லம் தோறும் சர்க்கரை பொங்கல் பொங்கட்டும்
- அகமும் புறமும் புழங்கும் வேண்டாதவைகளும் கவலைகளும் நீக்கப்படாதவைகளும் போகியின் நெருப்பில் கருக வாழ்விற்கு வெள்ளையடிக்க அடிக்கரும்பின் சவையாய் என்னாளும் இனிக்க பிறக்குது பொங்கல்.. எல்லோரும் கொண்டாடுங்கல் பொங்கலோ பொங்கல்
- வான்பொழிந்து சூரிய ஒளி அளித்து மண் சுபக்க கருப்பு இனிக்க, இயற்கை தந்த பரிசு புன்னகை மட்டுமே பெரிசு, இல்லம் தோரும் பொங்கட்டும் பொங்கலில் இருந்து