சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பழனியில் டெண்டர் எடுப்பதில் தள்ளுமுள்ளு !!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு பணிகளுக்கு இன்று டெண்டர் விடப்படுகிறது. இந்நிலையில் டெண்டரில் கலந்து கொள்ள டெண்டர் ஒப்பந்ததாரர்கள் அதிகம் வருகை தந்திருந்தனர். இதில் வருகை தந்த ஒப்பந்ததாரர்களை ஒரு தரப்பினர் உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தி உள்ளனர். இதன் காரணமாக இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது. பின்பு போலீசார் அங்கு வந்து இருதரப்பினரையும் சமாதானம் செய்ய முயன்றனர் அதில் ஒரு தரப்பினர் சாலை மறியல் செய்த பின்னர் போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் இதனால் அப்பகுதிகளில் சிறிது பதற்றம் ஏற்பட்டது.