சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
பேருந்து மோதி விபத்து(Bus vs Twowheeler Accident)…!
இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் மீது மோதிய தனியார் பேருந்து. உடுமலையில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு வந்த ஒரு தனியார் பேருந்து பொள்ளாச்சி வழியாக கோவை சென்றுள்ளது அப்போது அதிவேகமாக சென்ற பேருந்து ரத்தினம் கல்லூரி முன்பு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த இரு பெண்கள் மீது மோதியது அப்போது அந்த இரு சக்கர வாகனத்தில் சென்ற பெண்கள் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதனால் அவர்களுக்கு காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை பார்த்த அப்பகுதி மக்கள் கூட்டம் கூடி அடிபட்ட பெண்களை மீட்டு முதலுதவி அளித்தனர் அந்த இரு சக்கர வாகனம் பேருந்தின் அடியில் சிக்கிக்கொண்டது. மேலும் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் பேருந்து ஓட்டுனரை திட்டி உள்ளனர், மேலும் ஆத்திரம் முடிந்த ஒருவர் அந்த பேருந்தின் ஓட்டுனரை தந்து கையில் வைத்து இருந்த தலைக்கவசம் மூலம் தாக்கியுள்ளார். இந்த காணொளியானது சமுக வளைத்தளத்தில் பரவி வருகிறது. மேலும் அங்கு அணைத்து பயணியர் பேருந்தும் அந்த சாலையில் அதி வேகமாக தான் ஓடுகின்றனர் இதனால் அந்த சாலையில் விபத்துகள் ஏற்படும் அபாயம் அதிகம் உள்ளது எனவே இதற்கான தக்க நடவடிக்கையை போக்குவரத்துக்கு காவல் துறை மற்றும் அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றன.