சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
திருடனின் கைவரிசை(Money & Gold)…!
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் மற்றும் ஜோதிமணி தம்பதி இவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற பேராசிரியர் இவர்களுக்கு ஒரு மகன் அவரும் சென்னையில் குடும்பத்துடன் தங்கி ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இதனால் இவர்கள் மட்டும் அங்கு தனியாக வீட்டில் வசித்து வந்தனர். இதனை தெரிந்து கொண்ட திருடர்கள் நேற்று காலை அவர்கள் வீட்டில் இருக்கும்போது உள்ள புகுந்து மர்ம நபர்கள் சங்கர பாண்டியனின் கழுத்தை அறுத்துவிட்டு அவரது மனைவியையும் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர்.
அதன்பின் அவர்கள் அங்கு இருந்த அனைத்து நகைகளை எடுத்து மட்டுமில்லாமல் வீட்டில் இருந்த நகை மற்றும் பணத்தினை திருடி சென்றனர். அந்த மர்ம நபர்கள் பற்றி துப்பு கிடைக்காமல் இருக்க அவர்கள் வீடு முழுவதும் மிளகாய்ப்பொடி தூவி விட்டு சென்றனர். இதனை அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசுக்கு தகவல் கொடுத்தனர் பின்பு அங்கு விரைந்து வந்த போலீஸ் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார் மேலும் மாவட்ட காவல் ஆய்வாளர் 7 தனிப்படைகள் அமைத்து மர்ம நபர்களை தேடி வருகின்றன.