சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஷோரூமிலேயே நிகழ்ந்த சோகம்..!
இருசக்கர வாகன ஷோரூமில் தீடீரென்று எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் பேட்டரி வெடித்து சிதறியதால் அருகில் இருந்த அனைத்து இருசக்கரவாகனங்களும் வெடித்து சிதறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் மங்களூரு நகரில் நாகுரியில் ஸ்மார்ட் சிட்டி மோட்டார்ஸ் என்ற டீலர்ஷிப் விற்பனை மையம் உள்ளது. இந்த விற்பனை மையத்தின் உரிமையாளர் ஹமீத் ஆவார். விற்பனைமையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றின் பேட்டரி வெடித்து சிதறியதால் அருகில் இருந்த அனைத்து இருசக்கரவாகனங்களும் வெடித்து சிதறியது.
தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை கட்டுப்படுத்தினர் பல லட்சம் மதிப்புள்ள வாகனங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகிவிட்டது. அதிர்ஷ்டவசமாக எந்த ஒரு உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
தற்போது பேட்டரிகள் தீப்பிடித்து விபத்துக்குள்ளாவது அடிக்கடி நிகழ்கிறது. குறிப்பாக மின்சார இரு சக்கர வாகனங்களில் இந்தப் பிரச்னை அதிகமாக உள்ளது.
நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை வாசி உயர்ந்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் எலக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி வருகின்றனர். எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல் மாசுபாடும் மற்றும் வண்டிகளின் இரைச்சலும் குறையும் என்பதால் மற்ற நாடுகளும் மின்சார வாகனங்களை அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றன. நம் நாட்டிலும் தற்போது இந்த மின்சார வாகனங்களின் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற நிகழ்வுகள் மக்களிடத்தில் மின்சார வாகனங்களின் மீதான நம்பிக்கையின்மையை ஏற்படுத்துகிறது.