சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
தாய் கெழவி பாடல் எப்போ ரிலீஸ் தெரியுமா ?
தனுஷ் நடிக்கும் திருச்சிற்றம்பலம் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள தாய்கெழவி என்ற பாடல் இன்று வெளியாகிறது.
தமிழ் திரையுலகின் இன்றைய இளைஞர்களின் உள்ளத்தை மிக எளிமையாக கவர்ந்த இசையமைப்பாளர் அனிருத். தனுஷ் நடித்த 3 திரைபடத்தில் அறிமுகம் ஆனவர் அனிருத். படிப்படியே முன்னேறி இன்றைய இசையமைப்பாளர்களில் முன்னணி பட்டியலில் இடம்பிடித்துள்ளார் அனிருத்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களான விஜய் , அஜித் , சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி என பல வித காம்போக்களில் மிக பெரிய ஹிட் கொடுத்திருக்கிறார் அனிருத். அதிலும் ஸ்பெஷல் தனுஷ் அனிருத் காம்போதான். இவர்கள் இணைந்தால் அந்த ஆல்பமே கன்பாஃர்மா ஹிட்டுதான் என்ற அளவிற்கு இடம்பிடித்து விட்டார்கள். 3, விஐபி, மாரி, தங்கமகன் என தொடர்ந்து பல படங்களில் இணைந்த காம்போ பின்னர் பல காரணங்களால் இணையாமல் இருந்தது. இதனால் ரசிகர்களும் இவர்கள் எப்போது இணைவார்கள் என ஆர்வமாக காத்திருந்தனர்.
திருச்சிற்றம்பலம் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது. படத்தில் அனிருத் இசை என தெரிந்ததும் குதூகலமாகியுள்ளனர். இவர்களின் காம்போவில் தாய் கெழவி பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளது.
திருச்சிற்றம்பலம் திரைப்படத்தின் இயக்குனர் மித்ரன் ஜவகர் . இந்த படத்தில் 3 ஹீரோயின்கள் தனுஷுக்கு ஜோடியாக இருக்கிறார்களாம். ராஷி கன்னா, நித்யாமேனன், பிரியா பவானி ஷங்கர் ஆகியோர் தனுஷுடன் இந்த படத்தில் நடித்துள்ளதால் மிகவும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.