சர்மம் வெள்ளையாக்குவது எப்படி / Increase Color Of Skin In Tamil
ஸ்மார்ட் குடும்ப அட்டை.. (Smart Ration Card)
குடும்ப அட்டை என்பது நமது நாட்டில் குடியிருக்கும் நம் மக்களுக்கு அரசாங்கம் கொடுக்கும் ஆவணம் ஆகும். இந்த குடும்ப அட்டையானது ஒரு குடும்பத்துக்கு ஒன்று என்ற கணக்கில் கொடுப்பார்கள் அந்த ஸ்மார்ட் கார்டில் குடும்பத்தில் உள்ள அனைவரின் அடிப்படை தகவல்கள் அடங்கி இருக்கும் அதாவது கை ரேகை மற்றும் புகை படம் போன்ற தகவல்கள். மேலும் இந்த குடும்ப அட்டையில் உள்ளவர்கள் சென்றால் மட்டுமே நியாய விலை கடையில் பொருட்கள் வழங்கப்டும் ஏனென்றால் தற்போது காய் ரேகை மூலம் நமது வருகையை பதிவு செய்ய வேண்டும் மேலும் ஆனைத்தும் இணையத்தில் பதிவிடப்படுகிறது. இந்த குடும்ப அட்டை 5 வகைப்படும் இது பயன்படுத்தும் குடும்பத்தின் வருவாயை பொறுத்து மாறுபடும். ஒவ்வொரு அட்டைக்கு ஒரு விதமான பொருட்கள் நியாய விலை கடையில் கிடைக்கும்.
PHH வகை ஸ்மார்ட் குடும்ப அட்டை
இதன் விரிவாக்கம் Priority house hold இந்த குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர் எண்ணிக்கை 76,99,940 ஆகும் இவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அது மட்டும் இன்றி இவர்களுக்கு நியாய விலை கடையில் 8 கிலோம் அரிசி வாங்கிக்கொள்ளலாம்.
PHH-AYY வகை ஸ்மார்ட் குடும்ப அட்டை
இதன் விரிவாக்கம் PRIORITY HOUSE HOLD-ANTODAYA ANNA YOJANA இது வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு வழங்கப்படும் குடும்ப அட்டையாகும். இந்த குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தின் எண்ணிக்கை 18,64,600 ஆகும் இந்த குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தினர் 35 கிலோ அரிசி குறைந்த விலையில் கிடைக்கும்.
NPHH வகை ஸ்மார்ட் ரேஷன் கார்டு
இதன் விரிவாக்கம் NON PRIORITY HOUSE HOLD இந்த அட்டை வைத்துள்ளவர்கள் அரிசி பருப்பு சக்கரை என்ன என அனைத்து பொருட்களும் வாங்கி கொள்ளலாம் இந்த குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பத்தின் எண்ணிக்கை 90,08,842 ஆகும்.
NPHH-S வகை ஸ்மார்ட் ரேஷன் கார்டு
இந்த வகை கார்டு வைத்திருப்பவர்கள் நியாய விலை கடையில் அரிசியை தவிர மற்ற அணைத்து பொருளும் வாங்கி கொள்ளலாம் இந்த குடும்ப அட்டைதாரர் எண்ணிக்கை 10,01,605.
NPHH -NC வகை ஸ்மார்ட் ரேஷன் கார்டு
இந்த வகை ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் நியாய விலை கடைகளில் எந்த பொருளும் வாங்க முடியாது இது அவர்களுக்கு ஒரு முகவரி ஆதரத்துக்கும் அல்லது மற்ற தேவைக்கு மட்டும் தான் உபயோகிக்க முடியும்
இந்த 5 வகை ஸ்மார்ட் குடும்ப அட்டையை பயன்படுத்தி உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நியாய விலை கடைகளில் பொருள் வாங்கி பயன்பெறுங்கள்.